தீயில் கருகிய தாய் மற்றும் மகளின் மரணத்தில் திடீர் திருப்பம்!
கிளிநொச்சியில் தீயில் கருகி உயிரிழந்த தாய், மகள் அருகில் கத்தி மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சி தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த தாய், மகளின் சடலங்களை கிளிநொச்சி நீதவான் பார்வையிட்டார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 .50 மணியலவில் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் ஆனந்தராசா சீதேவி (47)என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான லக்சிகா (17) ஆகியோர் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் தருமபுர பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அத்துடன் இன்று சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று காலை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதே வேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோலும் மற்றும் ஒரு கத்தி, ஒரு தொலைபேசி என்பனவற்றை தடையவியல் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இது குறித்து தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை