கிளிநொச்சியில் பாரிய தீ விபத்து!📷
கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ அனர்த்தம் காரணமாக கோடிக்கனக்கான பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன.
மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் சென்று தீயினை 11 மணியளவில முழுமையாக கட்டுப்படுத்தினார்கள்.
கிளிநொச்சியில் உள்ள பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றாக இயங்கி வந்த மேற்படி நிறுவனத்தின் ஏற்பட்ட தீயினால் கோடிக்கான பெறுமதியான கட்டடப் பொருட்கள் எரிந்து அழிந்தும், முற்றாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன.
-நிருபர் தமிழ்ச்செல்வன்-
கருத்துகள் இல்லை