குற்றப்புலனாய்வுக்கு அழைக்கப்பட்டார் கோட்டபாயவை கிண்டல் செய்த பெண்!!
ஜனாதிபதி கோட்டாபய வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
இந்நிலையில் அந்த கணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அப்பெண், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகள் அனைத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரியால், பிரதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
ஜனாதிபதியை அவமதிப்பது கடுமையான குற்றம் எனவும், எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாமெனவும் தனக்கு அறிவுறுத்தியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தின் ஊடாக ஜனாதிபதி தனது வாகனத்தில்சென்ற போது, அங்கு பால்மா பக்கெற்றுகளை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள், ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை