வீடு திரும்பியுள்ள காணாமல் போன சிறுமி!


இந்த வருடம் (2022) ஜனவரி மாதம் 7-01-2022 ஆம் திகதி மஹரகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமி வீடு திரும்பியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

புதன்கிழமை (12-01-2022) குறித்த சிறுமி வீடு திருப்பியுள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மஹரகம பொலிஸ் விசேட குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸார்  செவ்வாய்க்கிழமை (11-01-2022) சிறுமியின் படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க பொது உதவியை நாடினர்.

மேலும், சிறுமியின் தாயார் மஹரகம OIC யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து தனது மகள் தமக்கு போன் செய்துவிட்டு வீடு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.