மனைவியை கிணற்றில் தள்ளிவிட்ட கணவர்!


முல்லைத்தீவு முள்ளியவளை - பூதன்வயல் கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவர் கொலையை தாம் செய்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கமூலம் வழங்கியுள்ளமை அதிர்ச்சியினை ஏர்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு முள்ளியவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூதன்வயல் கிராமத்திலுள்ள கிணறொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் 8ம் திகதி குடும்பப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த யோகராசா ராஜினி (வயது–39) இரண்டு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டார்.

அதேவேளை கடந்த 4ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்த நிலையில் அவர் 4 நாள்களின் பின் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

குடும்பப் பெண் இரண்டாவது திருமணமாக ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தையடுத்து கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் குடும்பப்பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பெண்ணின் தலையில் காயம் காணப்படுவதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டது.

இந்த நிலையில் பெண்ணின் கணவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தபோது மனைவியை தான்தான் கிணற்றில் தள்ளிவிட்டதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.