விளையாட்டால் பறிபோனது ஒரு குடும்பத்தின் உயிர்!!
சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சென்னை - பெருங்குடியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்திற்கு ஆன்லைனில் விளையாட்டில் பணத்தை இழந்ததே காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் பணத்தை இழந்த காரணத்தினால், பலரிடம் கடன் வாங்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை