யாழில் கடை உடைத்துத்அலைபேசி திருடியவர் கைது!

 


வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.


சந்தேக நபர் திருடிய அலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் சத்திரச்சந்தியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த டிசம்பர் 22ஆம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது.

அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகளில் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் றில்ரோக் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வாழைச்சேனை சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் 6 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.