மனைவியின் செயற்பாட்டினால் கணவரின் திடீர் முடிவு!


யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதவி நிலை உத்தியோகத்தராக உள்ள 37 வயதான குடும்பபெண் ஒருவர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று கனடா சென்று தற்போது யாழில் தங்கியிருக்கும் குடும்பஸ்தர் ஒருவருடன்  தொடர்பில் உள்ளதை அறிந்த கணவர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களின் முன்னர் இடம்பெற்றதாக கூறப்பட்டும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆசிரியரான கணவரிடம்,   அலுவலக நிமிர்த்தம் கொழும்பு செல்வதாகத் கூறி மனைவி  கொழும்புக்கு சென்றுள்ளார்.

அதே வேளை மனைவி கடமைபுரிந்த வங்கியில் நத்தார் கொண்டாட்டங்கள் நடந்துள்ளதுடன் அதற்காக வங்கி அதிகாரியான பெண்ணின் குடும்பத்திற்கும் அழைப்பிதழ் அனுப்பபட்டு அவரது பிள்ளைகளுக்கும் பரிசு உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மனைவிக்கு கூறாது குறித்த விழாவுக்கு தனது இரு பிள்ளைகளுடனும் கணவர் சென்றுள்ளார்.

அங்கு சென்ற கணவர் தனது மனைவி கொழும்பு சென்ற விடயத்தையும் விசாரித்த போது மனைவி தனிப்பட்ட விடுப்பு எடுத்துச் சென்றுள்ளதாக வங்கியிலிருந்து கணவர் அறிந்துள்ளார்.

சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியுற்ற கணவர், மனைவிக்கும் கூறாது கொழும்புக்கு தனது பிள்ளைகளுடன் சென்று மனைவியின் நடவடிக்கைகளை   ஆராய்ந்த போது மனைவியின் கனடாவிலிருந்து வந்த பாடசாலை நண்பருடன் சென்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொழும்பில் உள்ள கணவரின் தங்கையின் வீட்டில்   தங்கி இருந்த குடும்பஸ்தர் , தற்கொலைக்கு முயன்ற நிலையில் , தங்கையின் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.