கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தரை நியமனம்!


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் இன்று 22.01.2022 காலை கடமையேற்றுக்கொண்டார்.

கிழக்குப்பல்கலைககழத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள அலுவலகத்தில் சர்வமத ஆசீர்வாதத்துடன் கடமையேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் இலங்கை கிழக்குப் பல்கழகத்தின் உபவேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 25 வருடகால வரலாற்றைக்கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது உபவேந்தராக மட்டக்களப்பு – கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது கடமையேற்பு நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் ஏ. பகிரதன் ,பிடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முகாமைத்துவப் பேராசிரியரான வல்லிபுரம் கனகசிங்கம் இதற்கு முன்னர் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் முதல்வராகப் பணியாற்றியவராவார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.