தெய்வீக கிராமிய நிகழ்வும் கலை கலாசார பாரம்பரிய ஊர்வலமும் வவுனியாவில்!!

 


இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பழனி முருகனின் தெய்வீக கிராமிய நிகழ்வும் கலை கலாசார பாரம்பரிய ஊர்வலமும் வவுனியா, சிதம்பரபுரத்தில் இடம்பெற்றவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி அபிராமி உபாசகி ஆன்மிக நிலையம், பழனி முருகன் அறநெறி பாடசாலை, சிதம்பரபுரம் பகுதியில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இந்து கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரம்மஸ்ரீ.எஸ்.குகனேஸ்வரசர்மா வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் பிரதம அகதிகளாக அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிறப்பு அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன், உதவி மாவட்ட செயலாளர், திருமதி.ம.சபர்ஜா மற்றும் தலைவர், தமிழ்விருட்சம் செ.சந்திரகுமார் கண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் கௌரவ அதிதிகளாக ஆசிக்குளம், கிராம சேவையாளர் ஜனகன் பாலசுப்பிரமணியம், ஆசிக்குளம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தெ.மகேஸ்வரி, ஆசிக்குளம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் குணசேகரம் கோபிதரன், சிதம்பரபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.திலகரத்ன, ஆசிக்குளம், சுகாதார வைத்திய அதிகாரி புவனேஸ்வரன் நிரோசன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

நிகழ்வின் முன்னிலையாக சிவஸ்ரீ திவாகரக்குருக்கள், செயலாளர், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்,  மேலும் நன்றியுரையினை தமிழ் திரு மாதவன் நிகழ்த்தவுள்ளார்.

இங்கு ஆசிகுளம் பகுதி 06 அறநெறிப் பாடசாலை மாணவர்களைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்குபற்றி பாராட்டு மற்றும் உதவிகள் பெறவுள்ளனர் அத்துடன் 15 அறநெறி ஆசிரியர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இங்கு இந்துப் பண்பாட்டு நிதியத்தின் உதவியும் தொண்டு நிறுவனங்களின் உதவிகளும் செய்யப்படவுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.