மனைவியைப் பிரிந்தார் தனுஷ்!
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
"நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்துகொள்ளும் நேரம் இது!
எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை