மட்டுநகரில், மறுகாவின் ஏற்பாட்டில் “விடாய்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!,


 30.01.2022 நாளை {ஞாயிற்றுக்கிழமை} மட்டக்களப்பு நூலகர் கேட்போர் கூடத்தில் மு. ப 9. 55க்கு மறுகாவின் ஏற்பாட்டில் கவிஞர் தில்லை அவர்களின் “விடாய்” கவிதை நூல் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு திருமதி. ரூபி வலன்ரினா பிரான்ஸிஸ் { சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் } அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.



மேலும், அதிதிகளாக, பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், டொக்ரர் புஸ்பலதா லோகநாதன் { கவிஞர் மலரா} , எழுத்தாளர் இந்திராணி புஸ்பராசா, சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூலின் முதல் பிரதியினை டொக்ரர் கே . முரளிதரன் பெற்றுக்கொள்ளவுள்ளார். விமர்சன உரைகளை கவிஞர் வாசுதேவன், கவிஞர் .த. உருத்திரா ஆகியோரும் நன்றியுரையினை கவிஞர் சுதாகரி மணிவண்ணனும் ஆற்றவுள்ளனர்.



படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.