கொழும்பு - குருநாகல் வீதியில் விபத்து!!
கொழும்பு - குருநாகல் வீதியின் இரத்மல்கொட - இம்புல்கொட பிரதேசத்தில் பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (23) காலை குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணும், ஒன்பது ஆண்களும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பதவிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை