உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு!!
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பொது அமைப்புக்கள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் உதவிப்பொருட்களை கையளித்தார்.
நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உபபொருளாளர் அ.நாகராஜன் மற்றும் விளையாட்டுக்கழகத்தினர், திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை