வீதியைப் புனரமைக்குமாறு மக்கள் வேண்டுகோள்!!

                                           

 


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட சமிளையடிவட்டை வீதி மிக நீண்டகாலமாகவிருந்து பழுதடைந்து கிடப்பதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களையும். அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.


அவ்வீதியைப் பயன்படுத்தும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், அரச கடமைகளுக்குச் செல்லும் உத்தியோகஸ்த்தர்களென பலதரப்பட்டோரும், போக்குவரத்துச் செய்ய முடியாத நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மழைகாலங்களில் மிகுந்த சிரமத்தின் மத்திக்கத்தில் அவ்வீதியை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகயும், மக்கள் பிரதிநிதிகளும், கருத்திற் கொண்டு மிகவிரைவில் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


#News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.