ரொஷான் மஹாநாம பதவி விலகல்!!
இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹாநாம விலகியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த ரொஷான் மஹாநாம சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட்டில் எதிர்கால திட்டமிடல் பயிற்றுவிப்பாளர் தெரிவு வீரர்களின் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் பெரும்பாலானவை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அரவிந்த டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை ரொஷான் மஹாநாமின் இராஜினாமா தொடர்பில் வினவியபோது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் காரணமாக ரொஷான் மஹாநாம இந்தப் பதவியில் இருந்து விலகுவதாக கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை