பொங்கல் தினத்தில் இடம்பெற்ற பெரும் சோகம்!


யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுதும் போது  உழவு இயந்திரத்தில்  சிக்கி குடும்பஸ்தர்  உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம்  பொங்கல் தினமான இன்று நண்பகல்  இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.