வவுனியாவில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

 

திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று (24.01) அனுஸ்டிக்கப்பட்டது.  


வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  நகரசபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது


இதன்போது  சு.சுகிர்தராஜனின் உருவபடத்திற்க்கு மாலை அணிவிக்கப்பட்டு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றது.


வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் த.யோகராஜா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.