போலீஸ் பாராட்டு!!


அமெரிக்க நகர் ஒன்றில், ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாக அந்தக் காரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

அவரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு போலிஸ் ஜீப் அவரது காரை முந்திக்கொண்டு சென்று, அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ், அவரிடம் 'குட் வ்னிங் சார்...'

அவர் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?' என்று கேட்டார்.

போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாகக் கவனித்து வருகிறோம். ஆனால், நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்துக் காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகிறோம். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களைச் சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாகக் கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றனர்.

அவர் சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டுச் சொன்னார், 'இந்தப் பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்'

போலிஸ் அவரை ஒரு மாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா, 'நான் அப்பவேச் சொன்னேன் கேட்டியா, திருட்டுக் காரை எடுத்துகிட்டு வந்ததால், நாம் எல்லோரும் இப்போது போலிஸில் மாட்டிகிட்டோம்...'

அப்புறம் என்ன நடந்திருக்கும்...?
                         நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.