லதா மங்கேஸ்கருக்கு கொவிட்!!


 பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளார்.

எவ்வாறாயினும், அவர் நலமாக இருப்பதாகவும், அவரது வயதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

'தயவுசெய்து எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து, உங்கள் பிரார்த்தனைகளில் லதா மங்கேஸ்கரை வைத்துக் கொள்ளுங்கள்,' என்று அவர்கள் கோரியுள்ளனர்.

லதா முன்னதாக 2019 செப்டம்பரில் மூச்சுத்திணறல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.