கிரிசமனின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது!!
கிரி சமன் என்ற இளைஞனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது சிறுமி உட்பட நூற்றுக்கணக்கான சிறுமிகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பேஸ்புக் பக்கம் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேற்படி பேஸ்புக் பக்கத்தை நிர்வகித்துவந்த நபரிடம் வாக்குமூலம் பெற்றதுடன், புகைப்படம் எடுப்பதற்கும் திருத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட கெமராக்கள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்களையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.
அவர் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ராஜகிரிய - கலபலுவாவ பிரதேசத்தில் வசித்துவந்த மேற்படி சந்தேகநபர், கிரி சமன் என்ற பெயரில் டிக்டொக் சமூகவலைத்தளத்தில் இயங்கிவந்துள்ளார்.
இந்நிலையில், 11 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் குறித்த சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று போதைப்பொருளை கொடுத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை