யாழில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து போராட்டம்!!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஊர்காவற்துறை பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தில் இருந்து ஊர்காவற்துறை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை