லிற்றோ வழங்கவுள்ள காப்பறுதி!!
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்.
பாதிக்கப்பட்டவர்கள் 1311 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் இந்த காப்புறதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்ற எரிவாயு தொடர்புடைய வெடிப்பு சம்பவங்களால் 3 பேர்வரையில் உயிரிழந்த நிலையில்இ பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறான நட்டஈட்டை லிட்ரோ நிறுவனம் வழங்கவுள்ளது? என்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இந்த தகவலை வழங்கினார்.
இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் இதுவரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே விண்ணப்பித்துப் பயன்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை