மின்வெட்டு குறித்த நேர அட்டவணை வெளியானது!!

 


தற்போதை எரிபொருள் உள்ளிட்ட சில நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.


நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அதன் குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்.


தற்போது சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டினால் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. மேலும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்னும் 7 pm news  மணித்தியாலங்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மூன்று நாட்களில் டீசல் கிடைக்கவில்லை என்றால், மின்வெட்டு மூன்று மணிநேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.