சாணக்கியனுக்கு கொவிட் தொற்று உறுதி!

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவருக்கு தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.


இந்தநிலையிலேயே இன்றைய தினம் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தனது ட்விட்டர் பதிவில் இரா.சாணக்கியன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


அத்துடன், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் இரா.சாணக்கியன் கோரியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.