இலங்கை கிரிக்கெட் குழாம் அவுஸ்திரேலியா பயணம்!!


 ஐந்து போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த குழாமில், போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்து, பின்பு கடிதத்தை மீளப்பெற்ற பானுக ராஜபக்ஷ உள்வாங்கப்படவில்லை.

20 பேரைக் கொண்ட இந்த குழாம், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் அனுமதியை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் சிட்னி, மெல்பர்ன் மற்றும் மனுகா ஓவல் மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அவுஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

அதற்கமைய, அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிச்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

மேலும், அவர்களின் தலைமை பயிற்றுவிப்பாளரான ஜஸ்டின் லங்கருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, துணை பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் சுற்றுப்பயணத்தின் போது அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் குழாம் பின்வருமாறு,

தசுன் ஷானக (தலைவர்),

சரித் அசலங்க (உப தலைவர்)

அவிஷ்க பெர்னாண்டோ

பெதும் நிஸ்ஸங்க

தனுஷ்க குணதிலக

குசல் மெண்டிஸ்

தினேஷ் சந்திமால்

சாமிக்க கருணாரத்ன

ஜனித் லியனகே

கமில் மிஷார

ரமேஷ் மெண்டிஸ்

வனிந்து ஹசரங்க

லஹிரு குமார

நுவான் துஷார

துஷ்மந்த சமீர

பினுர பெர்னாண்டோ

மஹீஷ் தீக்ஷன

ஜெஃப்ரி வெண்டர்சே

பிரவீன் ஜயவிக்ரம

ஷிரான் பெர்னாண்டோ

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.