இலங்கை வந்தனர் ஓமானில் பாதிக்கப்பட்டவர்கள்!!
ஓமானிற்கு வீட்டு பணியாட்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில், இலங்கைக்கு திரும்பிய 22 பணியாளர்களில் ஆறு பேர் மீண்டும் ஓமானில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், மஸ்கட் சர்வதேச விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஏனைய 16 பேரும் இன்று அதிகாலை ஓமானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஓமானில் பாதுகாப்பு தடுப்பு மையத்தில் ஒருவருடத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடுதிரும்பியவர்கள், இரத்தினபுரி, பதுளை, கண்டி, சிலாபம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை