61 கோடி மாணவர்கள் கல்வி வாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்!!
கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் பல நாடுகளில் இலட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படை திறன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், அதனால் மன இறுக்கம், போதிய ஊட்டச்சத்து குறைவின்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை குழந்தைகள் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதிற்குள்ளான குழந்தைகளில் 70 சதவீதம் பேர் சாதாரண வாசகங்களை கூட வாசிக்கக் கூடிய திறனற்று உள்ளதாகவும், பாடசாலையில் இடைநிற்றல் அளவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக விரைவில் பாடசாலைகளை திறக்குமாறு உலக நாடுகளிடம் யுனிசெப் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை