பஸ்களில் பயணிப்போருக்கு தடுப்பூசி அட்டை!!
பஸ்களில் பயணிகள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா என்பது தொடர்பில் அவதானிப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற சுகாதார விதிமுறைகள் அவதானிக்கப்படவுள்ளதோடு, கொரோனா தடுப்பூசி அட்டையினையும் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்வதற்கே பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களில் வீதி அனுமதி பத்திரத்திரத்தினை இரத்துச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை