போதைப்பொருளுடன் ஐந்து கடத்தல்காரர்கள் கைது

 


மன்னார் பகுதியில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீண்டகாலமாக சர்வதேச கடல் எல்லையை மீறியவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.