இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகினார் ஸ்மித்!!

 


இலங்கைக்கு எதிரான எஞ்சிய இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித் விலகியுள்ளார்.


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நேற்றைய இரண்டாவது இருபதுக்கு20 போட்டியின் போது, எல்லைக்கோட்டிற்கு அருகில் கடினமான பிடியெடுப்பு ஒன்றிற்கு ஸ்டீவ் சுமித் முயற்சித்திருந்தார்.

இதன்போது, அவரது தலையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவருக்கு தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இலங்கைக்கு எதிரான குறித்த தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் வெளியேற்றப்பட்டுள்ளார்.

குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி 2க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.