இந்தியாவும் சீனாவும் ஒரே நேர் கோட்டில்..!


ஐநா பாதுகாப்பு சபையில் ரஸ்யாவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியாவும், சீனாவும் புறக்கணித்துள்ளன.


ரஸ்யா தனது 'வீட்டோ' அதிகாரத்தை வைத்துத் தீர்மானத்தை தோற்கடித்துள்ளது.


இதெல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதை ஒருத்தன் நந்திக்கடலில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். அது எப்படிப் பொய்க்கும்?


இந்தியாவை வைத்து,   சீனாவுக்கு 'செக்' வைத்து  சிறீலங்காவை வளைப்போம், முறிப்போம் என்றவர்களை கண்டா வரச் சொல்லுங்கள். முடிந்தால் கையோடு கூட்டி வாருங்கள்.


நமது அரசியல்'வியாதி'கள், அவியல் ஆய்வாளர்கள், செம்புகள் படித்துத் தெளிய வேண்டிய அரசியல் இது.


பள்ளிக்கூடப் படிப்பெல்லாம் நமக்குத் தேவையில்லை. பிரபாகரனைப் படியுங்கள் - புலிகளைப் படியுங்கள் - நந்திக்கடலைப் படியுங்கள்.


மீதியை வரலாறு எழுதும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.