அதிசய உண்மை - 60 வயது கூலித் தொழிலாளி மாடலாக மாற்றம்!!

 


கேரள மாநிலத்தில் கூலித்தொழில் செய்துவரும் 60 வயது முதியவர் திடீரென்று மாடலாக மாறியுள்ளார். மேலும் இவருடைய புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


கோழிக்கோடு மாவட்டம் வெண்ணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மம்மிக்கா. அன்றாட கூலித்தொழில் செய்து வாழ்க்கை நடத்திவரும் இவரை சாலையில் அழுக்கு உடையில் பார்த்தபோது புகைப்படக் கலைஞர் ஷரிக்வயலுக்கு மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்துள்ளார். இதையடுத்து மம்மிக்காவை பல கோணங்களில் போட்டோ எடுத்த ஷரிக் அவருடைய வித்தியாசமான நடை, ஸ்டைலை பார்த்து மாடலாக்க நினைத்திருக்கிறார்.


இதையடுத்து ஷரிக், மம்மிக்காவை பேஷன் கலைஞர் மஜினாஸிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மம்மிக்காவிற்கு தலைமுடியை சரிசெய்து உடையை மாற்றிப் பார்த்தபோது ஒரு அழகான விளம்பர மாடல் கிடைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து கையில் ஐபேட்டை வைத்துக்கொண்டு மம்மிக்கா ஸ்டைலாக நடந்துவரும் காட்சிகளை ஷரின் மற்றும் அவருடைய நண்பர் ஆஷிக் ஆகியோர் வீடியோ எடுத்து அதைச் சமூகவலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.


நைந்துபோய் அழுக்கு உடையில் வலம்வந்த மம்மிக்கா தற்போது கோட் சூட் அணிந்து ஹைட் டெக் மாடலாக இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் சில விளம்பர நிறுவனங்கள் அவரை அணுகுவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மம்மிக்காவை மாடலாக்கிய ஷரிக், ஆஷிக், பேஷன் டிசைனர் மஜினாஸ் ஆகியோருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.