உயர் தரப் பரீட்சையில் வினாத்தாள்கள் தாமதம் - பெற்றோர் விசனம்!!

 


கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின் போது வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் நடைபெற்ற இணைந்த கணிதபாட பரீட்சையின்போது, வழங்கப்பட்ட வினாத்தாள்களில் முதலாம் பகுதியும், இரண்டாம் பகுதியும், காலை 8.30 மணிக்கே மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் குறித்ததாள்களில் இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 8.30 மணிக்கு வழங்கப்பட்டிருந்ததோடு, மற்றைய முதலாம் பகுதி வினாத்தாள் இன்னும் வழங்கப்படவிலலையே சேர் என மாணர்கள், பரீட்சை மேற்பார்வையாளரிடம் கோரியதற்கிணங்க, அதன் பின்னர் காலை 10 மணியளவில் மற்றைய வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், எனினும் பரீட்வை வினாத்தாள்கள் 11.40 மணிக்கு சரியாக முடிவுறுத்தப்பட்டதாகவும், மாணவர்களும், பெற்றோரும் விசனம் தெரிவிக்கின்றர்.

இவ்விடையம் குறித்து பெற்றோர் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குச் சென்று தமது பிள்ளைகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் எழுத்துமூலம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விடையம் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியன், பட்டிருப்பு வலயக்கல்வி அதிகாரிகளுடனும், பெற்றோர்களுடனும், கலந்துரையாடினார்.

இன்று நடைபெற்ற பரீட்சையின்போது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறு தொடர்பாக குறித்த பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தன்னிடம் தெரிவித்ததாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனினும், மாணவர்களுக்கு நடந்த அநீதி தொடர்பில், தான் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.