தடுப்பூசி போட்டுக்கொள்ள ஜோ பைடன் அழைப்பு!


 அமெரிக்காவில் 35 மாகாணங்களில் இறப்பு அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லா அமெரிக்கர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இது இலவசம், எளிதானது மற்றும் பயனுள்ளது. உங்கள் உயிரையும் நீங்கள் விரும்புகிறவர்களின் உயிர்களையும் இது காப்பாற்றும்.

25 கோடி பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் காத்துள்ளனர். இதன் விளைவாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை நாம் காப்பாற்றி உள்ளோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள அமெரிக்காவில் 64 சதவீதம் பேர், அதவாது 21 கோடியே 20 லட்சம் பேர் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு விட்டதாக நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.