வெளிநாடொன்றில் மகனால் கொலை செய்யப்பட்ட இலங்கை தாய்!


ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இத்தாலியின் மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொலை செய்ததாக கூறும் 25 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தனது உடலுக்குள் புகுந்துள்ள உறவினர் ஒருவரின் ஆவியே தனது தாயை கொலை செய்ததாக கைதான சந்தேக நபர் கூச்சலிட்டு கூறியுள்ளார். கைதான சந்தேக நபரான மகன் இலங்கையின் நாத்தன்டிய பிரதேசத்தில் உள்ள தேவாலயத்துடன் தொடர்புபட்டு செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் தனது உடலில் பேய் பீடித்துள்ளதாக கூறி வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து பேய்க்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் 54 வயதான நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மிலான் நகர காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் தாயை மகனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.