இலங்கை இரத்தினக்கற்கள் டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில்!


பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 இரத்தினக்கற்கள் இடம்பிடித்துள்ளன.

துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர் மிகவும் மதிப்புமிக்க 25 இரத்தினக்கற்கள் இதன்போது காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சபாயர் தினம் (Sapphire Day – மாணிக்க தினம்) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இலங்கையின் நீல இரத்தினக்கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீல இரத்தினக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது  இதன் பிரதான நோக்கமாகும்.

மேலும் இந்த கண்காட்சியின் போது இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட சஃபாயர் ஸ்ரீலங்கா (Sapphire Sri Lanka) எனும் சிறப்பு காணொளி காட்சிபடுத்தப்படவுள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.