உத்தரபிரதேசத்தில் சம்பவம்:13 பெண்கள் கிணற்றில் தவறி விழுந்த உயிரிழப்பு!!


 உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்த நிலையில், பலகை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 13 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.