யாழ் பெண்ணிற்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

 


கடந்த 5 ஆண்டுகளாக  பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார்.

சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பானது.

நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா விசா மூலம் சேலம் வந்தடைந்தார் நிஷாந்தினி, அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையே விசா காலமும் விரைவில் முடிவடைவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.