சற்றுமுன்னர் கிளிநொச்சியில் பாரிய விபத்து!


கிளிநொச்சியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24-02-2022) இரவு 7-30 மணியாளவில் கிளிநொச்சி பளை ஏ 9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தின் போது படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள முன்னெடுத்துள்ளனர்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.