ஈழத்துப்பாடகர் எஸ்.ஜீ.சாந்தன் பற்றி பேசிய புலம்பெயர் இளம் மாணவன்


சுவிட்சர்லாந்து பாடசாலை பரீட்சையில்  ஈழத்துப்பாடகர் எஸ்.ஜீ.சாந்தன் பற்றி பேசிய தமிழ் மாணவன். 


மறைந்த ஈழத்துப் பாடகர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்கள் சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்து பாடசாலையின் பரீட்சையில் பேசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளியில் ஏழாம் வகுப்பில் கற்கும் மாணவன் செல்வன்.குமணன் அர்ஜித்   அவர்கள் இதனைப் பேசியிருக்கிறார். சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாட்டு மாணவர்களை பெருவாரியாகக் கொண்ட பாடசாலையின் குறித்த வகுப்பிற்கான, சங்கீத பாடத்திற்கான வாய்மொழி மற்றும் எழுத்து மூலமான பரீட்சையில், உலகின் பிரபலமான பாடகர் ஒருவரைக் குறித்து பகிர வேண்டும். அவ்வேளை செல்வன்.குமணன் அர்ஜித் மறைந்த ஈழத்துப் பாடகர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் இசைப்பணி பற்றி எடுத்துரைத்து, அவரது வரலாற்றையும் சிறப்பாக பகிர்ந்துள்ளார். இதனை ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டியதோடு, திறம்படஉரைத்தலுக்காக நூறுவீத புள்ளிகளை வழங்கியுள்ளனர். அர்ஜித் அவர்கள் ஐரோப்பாவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றின் சிறுவர் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குகின்றமை பற்றி இந்தப் பரீட்சையின் பின்னர் பாடசாலை நிர்வாகம் அறிந்துகொண்டது.


தமிழ்ப்பாடகர் ஒருவர் சர்வதேச அளவில் பேசப்பட்டமை முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அர்ஜித் அவர்கள் திரு.திருமதி.குமணன் பிறேமினி இணையரின் புதல்வன் ஆவார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.