பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்!!


 உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar)  சற்றுமுன்னர் மும்பையில் மரணமடைந்துள்ளார்.


படாகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்த தகவல் வெளியாகிய நிலையில் திரையுலகம் பெரும் சோகத்தில் உள்ளது.


மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, தமிழ், ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92 வயது). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


இவருக்கு கடந்த 8 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.


இருப்பினும், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவர் கவலைக்கிடமாக உள்ளார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர், டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார். என அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.