மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்கான பிரிவு உபசார விழா📸


முல்லைத்தீவு மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.பி.டி.எஸ்.கே விஜயதுங்க அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமைக்கான பிரிவு உபசார விழா இன்று(08) நண்பகல் 12.00மணியளவில் மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது தற்போது முல்லைத்தீவு மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று(07) பொறுப்பேற்றுக்கொண்டுள்ள இ.சசிக்குமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.


எச்.பி.டி.எஸ்.கே விஜயதுங்க அவர்கள் தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளள இடத்திற்கு இ.சசிக்குமார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்களத்தின் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.