திரைத்துறையில் இருந்து விலகுவதாக பிரபல நடிகர் அறிவிப்பு!!

 


2017 ஆம் ஆண்டில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பெரும் வரவேற்பை பெற்றது.


அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு நண்பனாக ராகுல் ராமகிருஷ்ணா நடித்திருந்தார்.

அதன் பின்னர் ‘அல வைகுந்தபுரமுலோ’, ‘ஜதிரத்னலு’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான ‘ஸ்கைலேப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘2022 ஆம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.