மட்டக்களப்பில் சிறுவன் மாயம்!

 


மட்டக்களப்பில் சந்திவெளி பிரதேசத்தைச் சோந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் வீட்டில் இருந்து நிலையில் கடந்த 28ம் திகதி காணாமல் போயுள்ளதாக இன்று (02) பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


சந்திவெளி பத்தினி அம்மன் கோவில் வீதி ஜீவபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய அன்ரனி ஆனுராஸ் என்ற சிறுவன் சம்பவதினமான கடந்த மாதம் 28ம் திகதி வீட்டில் இருந்துள்ள நிலையில் காணாமல் போள்ளார்.

கையடக்க தொலேபேசி கவரினுள் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபா பணத்தை காணவில்லை எனவும் அவரை எங்கு தேடியும் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்துதருமாறு இன்று (02) பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.