புதிய கொரோனா விதிமுறைகள்-சுவிஸ்!

 


சுவிஸ் கூட்டாட்சி அரசின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா விதிமுறைகள்.


*17.02.2022 வியாழக்கிழமையில் இருந்து உணவகங்கள், களியாட்டகூடங்கள் மற்றும் வியாபார நிலையங்களுக்குள் முகக்கவசம் அணியவேண்டியதில்லை.


* வைத்தியசாலை மற்றம் பொதுப்போக்குவரத்திலும் மார்ச் மாதம் (March-31) இறுதிவரை முகக்கவசம் அணிய வேண்டும்.


* சுவிஸ் நாட்டுக்குள் மாத்திரம் நாளைய தினத்தில் இருந்து கொரோனா சான்றிதழ் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. 


*கொரோனா சான்றிதழ் ஏனைய வெளிநாடுகளின் விதிமுறைகளுக்கு அமைவாக போக்குவரத்து, விடுமுறைகளின் போது பயன்படுத்தப்பட வேண்டும்.


* கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மார்ச் மாதம் இறுதிவரை (March-31) தற்போது உள்ள 5 நாள் தனிமைப்படுத்தலை நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.


* பொதுவான, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒன்றுசேரும் மக்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு நாளைய தினத்தில் இருந்து முடிவுக்கு வருகின்றது. இருப்பினும் மண்டப, மைதான, மாநில பொறுப்பானவர்கள் அதனை கட்டுப்படுத்த முடியும்.


* வீட்டிலிருந்து பணி செய்யும் நடைமுறை முடிவுக்கு வருகின்றது. நிறுவனங்கள், திணைக்களங்கள், தொழில் நிலையங்கள், மாநிலம் ஆகியன தங்கள் விருப்பப்படி இதனை தீர்மானிக்கலாம். 


*நோயுற்று இருப்பவர்கள் வைத்தியரின் சான்றிதழுடன் அல்லது ஆலோசனைப்படி  தேவைப்படின்  வீட்டில் இருந்து வேலை செய்யலாம். இதனையும் நிறுவனங்கள், திணைக்களங்கள், தொழில் நிலையங்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.