ரயில் பயணிகளுக்கு மகிழ்வான தகவல்!
ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இன்று முதல் ஆன்லைனில் ரயில் பயணத் சீட்டுகளை வழங்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் பயணிகள் இணையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும் அல்லது கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆசனத்தை முன்பதிவு செய்ய முடியும் என இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
மேலும் இதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் இந்த வசதி கிடைக்கும்.
இதன்போது பயணிகள் கடன் அட்டைகளை பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை