உக்ரைன் அதிபர் பொது மக்களிடம் அவசர கோரிக்கை!

 


உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.


ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.

இந்த நிலையில், இராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சக்தி வாய்ந்த ஆயுதங்களால் இராணுவ தளவாடங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.