ட்ரோன் பாகங்கள் சிதறியதில் சவூதியில் 12 பேர் காயம்!!

 


சவூதி அரேபியாவின், தெற்கு ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள அபா (Abha) விமான நிலையத்திற்கு அருகில் ஹவூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலை சவூதி அரேபிய வான்படை தடுத்துள்ளது.


எவ்வாறிருப்பினும், சேதமடைந்த ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணையின் பாகங்கள் விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்துள்ளன.

இதன்போது, இலங்கையர் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

சவூதி அரேபிய பிரஜைகள் உட்பட, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ் முதலான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.

இது பயங்கரவாத தாக்குதலாகும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.