App ஒன்று பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கம்!!

 


மால்வேரால் (Malware) பாதிக்கப்பட்ட டூ-ஃபேக்டர் ஆதன்டிகேஷன் (Two-Factor Authentication) எனும் App வசதியை பிளே ஸ்டோரிலிருந்து கூகுல் நிறுவனம் நீக்கியுள்ளது.


குறிப்பாக டூ-ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் App (Two-Factor Authentication App) வசதியானது கணக்குகளை (Accounts) ஒன்லைனில் (Online) பாதுகாக்க சிறந்த வழியாக கருதப்பட்டுவந்தது. ஆனால், இந்த App வசதியானது வங்கி சார்ந்த தகவல்களை திருடும் என்று தகவல் வந்ததால், கூகுள் நிறுவனம் இந்த App நீக்கியுள்ளது.


கூகுள் நிறுவனம் இதை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு முன்னர், இந்த App 10,000 முறைகள் பதிவிறக்கம் (Download) செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த App வசதியை யாராவது தங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் (Install) செய்திருந்தால் உடனே அழித்துவிடுமாறு (Delete) கோரப்பட்டுள்ளது.


மேலும் கடந்த ஆண்டு இறுதியில் மால்வேர் அலர்ட் காரணமாக பிளே ஸ்டோரிலிருந்து ஏழு அப்ளிகேஷன்களை கூகுள் நிறுவனம் நீக்கியிருந்தது. காஸ்பர்ஸ்கி நிபுணர் ஒருவர் பிளே ஸ்டோரில் சில அப்ளிகேஷனில் மால்வேர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.


குறிப்பாக காஸ்பர்ஸ்கி நிபுணர், பயனர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த அப்ளிகேஷன் குறித்து விவரங்களையும் சொல்லி இருந்தார். அதன் பேரில் கூகுள் நிறுவனம் அந்த அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போது கூகுள் நிறுவனம் நீக்கிய அந்த அப்ளிகேஷன்களின் பட்டியலில்,


1.QRcode Scan – QR கோட் ஸ்கேன்

2.EmojiOne Keyboard – எமோஜி ஒன் கீபோர்ட்

3.Battery Charging Animations Battery Wallpaper – பேட்டரி சார்ஜிங் அனிமேஷன்கள் பேட்டரி வால்பேப்பர்

4.Dazzling Keyboard – Dazzling கீபோர்டு

5.Volume Booster Louder Sound Equalizer -வால்யூம் பூஸ்டர் லவுட் சவுண்ட் ஈக்வலைசர்

6.Super Hero-Effect – சூப்பர் ஹீரோ எஃபெக்ட்

7.Classic Emoji Keyboard – கிளாசிக் எமோஜி கீபோர்ட்

குறிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன்களை முன்னதாகவே இன்ஸ்டால் செய்துள்ள பயனாளர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலவசமாக உங்களுக்கு ஏதேனும் ஒரு முக்கிய சேவை கிடைக்கிறது என்றால் ஒரு முறைக்கு இரண்டு முறையாவது யோசித்துக்கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைக்கும் எந்த ஒரு சேவைக்குப் பின்னணியில் ஏதேனும் ஒரு இலாபகரமான செயல்பாட்டை அந்த எப்ஸ்கள் உங்களுக்குத் தெரியாமல் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.